... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 12நெல்லிக்காய்
  2. 2டேபிள் ஸ்பூன் ஊறுகாய் மிளகாய் தூள்
  3. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  4. 1/4 கப் ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. உப்பு, தாளிக்க கடுகு, மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    நெல்லிக்காயை நன்றாக கழுகி துடைத்து அதை ஆவியில் வேக விட்டு எடுத்துக்கவும்

  2. 2

    வேக வைத்து வெச்சிருக்கும் நெல்லிக்காய்களை உதிர்த்து வெச்சுக்கவும்

  3. 3

    ஸ்டவ்வில் வாணலி வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் உரித்து வெச்சிருக்கும் நெல்லிக்காய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்

  4. 4

    அத்துடன் கல்லுப்பு, மற்றும் ஊறுகாய் மிளகாய் தூள் (மிளகாய் வத்தல், வெந்தயம் சேர்த்து சட்டியில் வறுத்து அரைத்த தூள்)சேர்த்து,கூட கொஞ்சம் எண்ணை சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    ஓன்று சேர்ந்து வரும்போது ஸ்டவ்வில் இருந்து கீழே இறக்கி விடவும். கரண்டியில் மீதி எண்ணெய் ஊற்றி சூடு பண்ணி கடுகுவெடிச்சதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நெல்லிக்காய் தொக்கில் ஊற்றி கலந்து விடவும். சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்...

  6. 6

    சுவையான உடல் ஆரோக்கியதுக்கேத்த நெல்லிக்காய் தொக்கை சாதம், தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட அருமை யாக இருக்கும்..எல்லோரும் நெல்லிக்காய் ஊறுகாய் செய்வார்கள், நான் தொக்கு செய்திருக்கிறேன்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes