தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/2 கிலோ (2 கப்) சீரக சம்பா அரிசி (2 முறை அலசி 20 நிமிடம் ஊற வைக்கவும்)
  3. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  4. 4 டேபிள்ஸ்பூன் நெய்
  5. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2 கப் கெட்டித்தயிர்
  8. 4 கப் தண்ணீர் (1000மிலி தண்ணீர்)
  9. உப்பு
  10. 1/2 எலுமிச்சை சாறு
  11. தனித்தனியாக அரைக்க வேண்டியவை
  12. 5-6 பச்சை மிளகாய்
  13. 35 சின்ன வெங்காயம்
  14. 15 பூண்டு பல்
  15. 1கைப்பிடி புதினா, கொத்தமல்லி இலை, 2 இன்ச் இஞ்சி
  16. பிரியாணி மசாலா அரைக்க
  17. 2-3 பட்டை
  18. 3 லவங்கம்
  19. 2 டீஸ்பூன் மிளகு
  20. 1 டீஸ்பூன் சீரகம்
  21. 3 ஏலக்காய்
  22. 1 ஜாதிபத்திரி
  23. சிறிதுஜாதிக்காய்
  24. 1 அண்ணாச்சி பூ

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    பிரியாணி மசாலா அவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து பிறகு ஆறிய பிறகு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அதன் பிறகு பச்சை மிளகாய்,பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி,புதினா கொத்தமல்லி என தனித்தனியாக படத்தில் காட்டியவாறு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து பிரியாணி மசாலாவை சேர்க்கவும் பிரியாணி மசாலா நன்றாக வாசனை வரும் பொழுது இதனுடன் தனியாக அடைத்த பூண்டு பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சின்ன வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    நன்றாக நிறம் மாறி வரும் பொழுது அதில் புதினா கொத்தமல்லி இஞ்சி அரைத்த கலவையை சேர்த்து கரும் பச்சை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும்... சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

  5. 5

    சிக்கன் நிறம் மாறி வந்த பிறகு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் அதன் பிறகு மிளகாய் தூள்

  6. 6

    மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  7. 7

    இப்போது 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் சிக்கன் முக்கால் பதம் வெந்த பிறகு மீண்டும் 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் நன்றாக கொதித்து வரும் வேளையில் ஊறவைத்த அரிசியை இதனுடன் சேர்த்து கிளறவும்

  8. 8

    தண்ணீர் அரிசியுடன் சேர்த்து நன்றாகக் கொதித்து 90% வற்றிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து மீண்டும் நன்றாக கிளறவும் பிறகு குறைந்த தீயில் வைத்து காற்று புகாதவாறு படத்தில் காட்டியவாறு துணியால் மூடி மூடி வைக்கவும் அல்லது ஒரு தட்டினால் மூடி கனமான பொருளை அதன் மேல் வைத்து காற்று வெளியேறாத வாழு குறைந்த தீயில் 15 மூடி வைக்கவும் வைக்கவும்

  9. 9

    15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மீண்டும் 15 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறி விடவும்

  10. 10

    அட்டகாசமாக செய்யக்கூடிய சிக்கன் பிரியாணி தயார் நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes