தலசேரி (மலபார்) பிரியாணி

தலசேரி (மலபார்) பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 2
அதே எண்ணெயில் முந்திரியைப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 3
பிரியாணி மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் தூளாக அரைத்துக் கொள்ளவும்
- 4
மிக்ஸியில் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 5
சீரக சம்பா அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு ஒரு கடாயில் 5 கப் தண்ணீர் உப்பு, பச்சைமிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைக்கவும் பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் (அரிசியை தொட்டுப் பார்த்தால் சற்று விதையாகவும் வெந்தும் இருக்க வேண்டும்) பிறகு அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு கரகரப்பாக அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி சிக்கனை சேர்க்கவும்
- 7
இதனுடன் அரைத்து வைத்த பிரியாணி மசாலா மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 8
பிறகு இதில் கெட்டித் தயிர் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கி குறைந்த தீயில் மூடி வைத்து சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 9
சிக்கன் முக்கால் பதம் வெந்த பிறகு இதில் நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்க்கவும் பிறகு வேக வைத்த அரிசியை இதன்மேல் சேர்க்கவும்
- 10
அரிசியின் மேல் நறுக்கிய புதினா கொத்தமல்லி, பொரித்து வைத்த வெங்காயம், முந்திரி சிறிது நெய் சேர்த்து காற்று புகாதவாறு பாயில் சீட்டால் மேலே மூடி, மூடி போட்டு வைக்கவும்... தோசை சட்டியை சூடு செய்து குறைந்த தீயில் வைத்து தோசை சட்டியின் மேல் பிரியாணி பாத்திரத்தை 20 நிமிடம் வைக்கவும்
- 11
20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து மெதுவாகத் திறக்கவும் இப்போது மேலே உள்ள அரிசியை தனியாகவும் சிக்கனை தனியாக பிரித்து வைக்கவும்(படத்தில் காட்டியவாறு)
- 12
பரிமாறும்போது தட்டில் முதலில் சிக்கனை வைக்கவும் பிறகு அதன் மேல் அரிசியை வைத்து நன்றாக மூடவும்
- 13
பரிமாறும் பொழுது பொரித்த வெங்காயம் முந்திரியை தூவி பரிமாறவும்
- 14
தலசேரி பிரியாணி தாயார் இதை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
#karnataka உப்பிட்டு / உப்மா
#karnataka உப்பிட்டு என்பது ஒரு இந்திய காலை உணவு மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரியன், ஒடியா மற்றும் இலங்கை போன்ற மாவட்டங்களில் மிகவும் பொதுவான உணவாகும் Christina Soosai -
-
-
-
-
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
மலாய் கோஃப்டா(malai kofta)
மலாய் கோஃப்டா என்பது முகலாய் உணவு வகைகளிலிருந்து தோன்றிய ஒரு உன்னதமான வட இந்திய உணவு. மலாய் கிரீம் குறிக்கிறது மற்றும் கோஃப்டாக்கள் ஆழமான வறுத்த பன்னீர் மற்றும் பணக்கார மற்றும் கிரீமி தக்காளி கிரேவியில் காய்கறி பாலாடை.#hotel Saranya Vignesh -
-
-
-
-
-
-
பதீர் ஃபெனி சிரோட்டி
#Karnataka சிரோட்டி கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய இனிப்பு செய்முறை, இது ஒரு இந்திய பஃப் பேஸ்ட்ரி ... இது ஃபெனி அல்லது பெனி போன்ற பிற பெயர்களிலும் அறியப்படுகிறது. இந்த டிஷ் தென்னிந்தியாவின் சில இடங்களில் நன்றாக ரவாவுடன் தயாரிக்கப்படுகிறது. இங்கே இது முக்கியமாக மைதா அல்லது ரவை,நெய் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது முக்கியமாக இனிப்பு பால் முன்னுரிமை பாதாம் பால் மற்றும் தூள் சர்க்கரையுடன் வழங்கப்படுகிறது. இவை முக்கியமாக பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகின்றன. Viji Prem -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)