முளைக்கட்டிய பச்சைப்பயிறு சாதம்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week11குழந்தைகளுக்கு முளைக்கட்டிய பச்சைப்பயிறு சாதம் சுலபமாக செய்யலாம்.10 மாதம் முதல் இதை கொடுக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 நபர்
  1. 1/2 கப் பச்சைப்பயிறு
  2. 1/4 கப் அரிசி
  3. 1 ஸ்பூன் நெய்
  4. 1 பூண்டு
  5. 4 சின்னவெங்காயம்
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. 1/4 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பச்சைப்பயிறு எடுத்து நன்கு அலசி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு ஊறிய பயிறை தண்ணீர் வடித்து எடுத்து ஒரு ஹாட் பேக் இல் போட்டு மூடி குறைந்தது 12 மணி நேரம் வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் சேர்த்து சீரகம் பூண்டு சேர்க்கவும்.

  3. 3

    பிறகு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.(30 நிமிடம்) ஊறவைத்த அரிசி சேர்க்கவும்.

  4. 4

    1 கை முளைக்கட்டிய பயிறு சேர்க்கவும்,1/4 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 4 விசில் விடவும்.

  6. 6

    வெந்ததும் நன்கு மசித்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes