எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 1/2 கிலோ சீரக சம்பா அரிசி (2 முறை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்)
  3. 2நறுக்கிய வெங்காயம்
  4. 2நறுக்கிய தக்காளி
  5. 2 டேபிள்ஸ்பூன் பூண்டு விழுது
  6. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி விழுது
  7. 10-15 வர மிளகாய்
  8. 1/2 கெட்டித்தயிர்
  9. 1/2 எலுமிச்சை சாறு
  10. 1கைப்பிடி பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை
  11. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  13. 2 பட்டை
  14. 3 லவங்கம்
  15. 1பிரிஞ்சி இலை
  16. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    பிரியாணி சட்டியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்

  2. 2

    இத்துடன் அரைத்த பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இஞ்சி விழுது சிறிது நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெதுவெதுப்பான நீரில் வரமிளகாயை 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு இதனை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும் இப்போது அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

  4. 4

    இப்போது நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும் சிக்கன் நன்றாக நிறம் மாறிய பிறகு தயிர் சேர்க்கவும்

  5. 5

    மீதியிருக்கும் நறுக்கிய புதினா கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைத்து குறைந்த தீயில் முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் (தண்ணீர் விடத் தேவையில்லை) பிறகு இதில் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்

  6. 6

    மற்றொரு பாத்திரத்தில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்திற்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    இப்போதும் வேக வைத்த அரிசியை வேக வைத்த சிக்கன் மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து மேற்பகுதியில் சிறிது நெய் விடவும் அதனுடன் நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து அதன் மேல் காற்று புகாதவாறு ஒரு தட்டை வைத்து கனமான பொருளை வைத்து தோசை சூடு செய்து அதன் மேல் பிரியாணி சட்டியை குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும்

  8. 8

    20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து மெதுவாகத் திறந்து கிளறவும்... சுவையான மணமணக்கும் சிக்கன் தம் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes