தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் பாசுமதி ரைஸ்
  2. 2நீள வாக்கில் வெட்டின வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1பச்சைமிளகாய்
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1/4 கப் தயிர்
  10. மல்லி, புதினா இலை
  11. 2ஸ்பூன் நெய் + 2 ஸ்பூன் எண்ணெய்
  12. 1துண்டு பட்டை
  13. 2பிரிஞ்சி இலை
  14. 2ஏலக்காய்,3கிராம்பு
  15. 1அன்னாசிப்பூ,,
  16. 1ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பாசுமதி ரைஸ் 1/2 மணி நேரம் தண்ணியில் ஊற வைத்துக்கவும்

  2. 2

    ஸ்டவ்வில் ஒரு குக்கர் வைத்து 2+2 நெய் எண்ணெய் விட்டு அதில் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, நட்த்திர சோம்பு சேர்த்து வறுத்துக்கவும்

  3. 3

    அத்துடன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்தும் இஞ்சிபூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பச்ச வாசனை போகும்வரை வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்துக்கவும்

  4. 4

    தக்காளியை சேர்த்து நன்கு குழைந்து வரும்போது,3 கப் தண்ணி சேர்த்து தேவையான உப்பு, மல்லி, புதினா போட்டு அரிசியை மிதமான சூட்டில் 1 விசிலுக்கு வேக வைத்து எடுத்துக்கவும்

  5. 5

    காய்கறி எதுவும் போடாமல் சீக்கிரத்தில் சுவையான குஸ்கா சாப்பிட தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes