மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)

#Grand1
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.
சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சூரியன் தயார் செய்ய தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.கேரட், முட்டைகோஸ், வெங்காயம், வெங்காயத்தாள், எல்லாவற்றையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.1/2 டேபிள் ஸ்பூன், சில்லி சாஸ் அரை ஸ்பூன் உப்பு எடுத்துக் கொள்ளவும்.அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும். கால் கப் மைதா கால் கப் கார்ன்ஃப்ளார் ரெடி செய்து கொள்ளவும். இவை எல்லாவற்றையும் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து போண்டாமாவு செய்து கொள்ளவும். நீர் சேர்க்க வேண்டாம்.
- 2
ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு காயவைத்துக் கொள்ளவும். சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.
- 3
இதற்கிடையில் ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் அரிசியை சேர்த்து பதமாக வேக வைத்துக் வடித்து கொள்ளவும். குழைய விட வேண்டாம். அல்லது குக்கரில் குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
நான்ஸ்டிக் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அது காய்ந்தவுடன்,பொடியாக அரிந்த இஞ்சி பூண்டு,இரண்டாக அறிந்த ஒரு பச்சை மிளகாய் சேர்த்து உயர் தீயில் வதக்கவும். உடன் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்க்கவும்.பின்பு அதில் பொடியாக அரிந்த குடமிளகாய், கேரட் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து லேசாக கலர் மாறும் வரை அதிக தீயில் வதக்கவும்.
- 5
பிறகு நடுவில் குழி செய்து அதில் அரை டேபிள்ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், 2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு கலந்து விடவும். அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்..கால் கப் கார்ன் மாவை கால் டம்ளர் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். அதை இதில் சேர்த்து கலந்து விடவும். கெட்டியாகும்.
- 6
இப்போது பொரித்து வைத்த மஞ்சூரியன் உருண்டைகளை முட்டைகோசுடன் சேர்த்து அதிக தீயில் நன்கு ஒன்றுசேர்ந்து combine ஆகும் வரை கலந்து விடவும்.பிறகு வேக வைத்து ஆற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு சூடு ஏற கலந்து விடவும்.அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.2 டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து அலங்கரிக்கவும்.
- 7
சுவையான மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் ரெடி. தொட்டுக்கொள்ள shorbaa அல்லது ஏதாவது ஒரு கிரேவி செய்து கொள்ளவும். இல்லையென்றால் ரைதா ஏதாவது ஒன்று செய்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
-
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
-
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
More Recipes
கமெண்ட் (2)