சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 Week15 #Jaggery
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. 1பெரிய சர்க்கரைவள்ளி கிழங்கு
  2. ஒரு கப் கோதுமை மாவு
  3. ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  4. மூன்று ஏலக்காய்
  5. முக்கால் கப் துருவிய வெல்லம்
  6. 2 சிட்டிகை ஆப்ப சோடா
  7. கால் டீஸ்பூன் சுக்குப்பொடி
  8. கால் கப் துருவிய தேங்காய்
  9. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  10. 3 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு, ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    துருவிய வெல்லத்தை மாவு கலவையுடன் சேர்த்து வெல்லம் கரையும் வரை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு துருவிய கிழங்கு மற்றும் தேங்காயை மாவுடன் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டுக் கொள்ளலாம்.

  4. 4

    குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எல்லா குழிகளிலும் நெய் விட்டு காய்ந்தவுடன், மாவை குழிகளில் ஊற்றி திருப்பி விட்டு, வெந்தவுடன் எடுக்கவும். சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு குழிப்பணியாரம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes