மில்க் ஜெல்லி புட்டிங் (Milk jelly pudding recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

மில்க் ஜெல்லி புட்டிங் (Milk jelly pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. மில்க் புட்டிங் செய்ய:
  2. 300 மில்லி பால்
  3. 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  4. 150 மில்லி மில்க்மெயின்ட்
  5. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  6. 5 கிராம் சைனா கிராஸ்
  7. 200 மில்லி தண்ணீர்
  8. 1/8 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  9. ஜெல்லி புட்டிங் செய்ய:
  10. 5 கிராம் சைனா கிராஸ்
  11. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  12. 200 மில்லி தண்ணீர்
  13. 2 ஸ்பூன் புளூபெர்ரி க்ரஷ்
  14. அலங்கரிக்க:
  15. கலர் ஸ்ப்ரிங்கல்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மில்க் புட்டிங் செய்ய: 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் சைனா கிராஸ் ஐ சேர்த்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் 100 மில்லி தண்ணீர் ஐ கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்த சைனா கிராஸ் ஐ சேர்த்து நன்கு கரையும் வரை கிளறிவிடவும்

  2. 2

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும் பின் மில்க்மெயின்ட் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் சற்று திக்கானதும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    பின் சற்று ஆறியதும் இளஞ்சூட்டில் இருக்கும் சைனா கிராஸ் ஐ வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஸ்டார் வடிவ மோல்டை ஈரப்படுத்தி கொண்டு அதில் இந்த மில்க் புட்டிங் கலவையை ஊற்றி பிரிட்ஜில் 1 மணி நேரம் வரை செட் ஆக விடவும்

  4. 4

    ஜெல்லி புட்டிங் செய்ய: 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் சைனா கிராஸ் ஐ சேர்த்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் 100 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்த சைனா கிராஸ் ஐ சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி கரைந்ததும் இறக்கி புளூபெர்ரி க்ரஷ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் சற்று ஆறியதும் ஏற்கெனவே செட் ஆன மில்க் புட்டிங் மேல் ஊற்றவும்

  6. 6

    பின் அதன் மேல் கலர் ஸ்ப்ரிங்கல்ஸ் ஐ பரவலாக தூவி மூன்று மணி நேரம் வரை பிரிட்ஜில் செட் ஆக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes