ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil)

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen

ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 4 தக்காளி
  2. 2 வர மிளகாய்
  3. 2 கப் பாஸ்தா
  4. 2 வெங்காயம்
  5. 4 பூண்டு பற்கள்
  6. ½ ஒரு டீஸ்பூன் மிளகு தூள்
  7. 1 1 டீஸ்பூன் உப்பு
  8. 4 டேபிள் ஸ்பூன் டொமேட்டோ சாஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பை சேர்த்து பாஸ்தாவை 7 நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்த பிறகு சூடான நீரை வடிகட்டி குளிர்ந்த நீரை சேர்க்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் வரமிளகாய் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்த பிறகு அதில் தக்காளியை சேர்த்து சுமார் 3 நிமிடம் வேக வைக்கவும். மூன்று நிமிடத்துக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாயை தண்ணீரிலிருந்து எடுக்கவும். தக்காளியின் தோலை உரிக்கவும். உரித்ததுக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுது ஆகும்வரை அரைக்கவும்.

  3. 3

    2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நறுக்கின பூண்டு சேர்த்த 2 நிமிடம் வதக்கவும். இப்போது அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கி வதக்கவும். இப்போது அதில் டொமேட்டோ ப்யூறே சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்கவும். டொமேட்டோ சாஸ் மற்றும் வேக வைத்த பாஸ்தாவை சேர்க்கவும். சேர்த்து சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு அடுப்பை அணைக்கவும். ரெட் பாஸ்தா ரெடி, சூடாகப் பரிமாறவும். பரிமாறும்போது சீஸ் தூவி கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen
அன்று

Similar Recipes