கேரட்பால் அல்வா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

நான் முதல்முறை செய்தது
#GRAND2

கேரட்பால் அல்வா

நான் முதல்முறை செய்தது
#GRAND2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2 பரிமாறுவது
  1. கேரட் 4
  2. நெய் தே.அளவு
  3. சீனி 1/4 கப் போதுமானது
  4. கேசரிபவுடர் 1 pinch
  5. முந்திரி,கிஸ்மிஸ்,பாதாம் அளவாக எடுத்துக் கொள்ளவும்
  6. பால் 1/2 கப்
  7. ஏலக்காய் 2

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும் பின் ஏலக்காயை இடித்து எடுத்துக் கொள்ளவும் பாதாமை உடைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும் கேசரி பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளவும் பால் காய்ச்சி ஆறியதாக இருக்க வேண்டும்

  3. 3

    கடாயில் நெய் ஊற்றி கிஸ்மிஸ்,முந்திரியை வறுத்துக் கொள்ளவும் (என்னிடம் முந்திரி இல்லை)

  4. 4

    பிறகு நெய் ஊற்றிய கடாயிலேயே துருவியக் கேரட்டை போட்டுக் கொள்ளவும் அதில் பால்ச் சேர்க்கவும்

  5. 5

    பால் கொதிக்கும் போதே அதில் இடித்த ஏலக்காய்களைச் சேர்க்கவும்

  6. 6

    பின் தண்ணீர் வற்றியதும் கேசரி பவுடர் கரைசலைச் சேர்க்கவும் (இது தேவைப்பட்டால் மட்டுமே) பின் சீனி சேர்க்கவும் அதிகமாக வேண்டாம் கேரட்டில் இனிப்புச்சுவை உள்ளது

  7. 7

    சீனி உருக ஆரம்பித்ததும் கைவிடாமல் கிண்டவும் தண்ணீா் வற்றிக் கொண்டிருக்கும் போது ஓரங்களில் நெய்ச் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    ஒட்டாமல் வந்ததும் வறுத்து வைத்திருந்த முந்திரிக் கிஸ்மிஸ்யை சேர்த்துக் கொள்ளவும் சுவையான கேரட் பால் அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes