கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று
#ownrecipe

கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)

மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கி கட்லா மீன்
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 4பல் பூண்டு
  5. 1தேங்காய்ச்சில்
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1ஸ்பூன் சீரகம்,வெந்தயம்
  8. பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசல்
  9. தே.அ மஞ்சள் தூள்,தனியாத்தூள்,மிளகாய் தூள்,குழம்பு மசால்த் தூள்
  10. தேவைக்கேற்ப உப்பு,எண்ணெய்,தண்ணீர்
  11. தேவைக்கேற்ப சிக்கன் பொடி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    தேவையானப்பொருள்களை எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தில் 10ஐ அரைப்பதற்கும் மற்ற 10ஐ தாளிப்பிற்கும் உபயேகிக்கவும்

  2. 2

    பின் புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    மீன் 1 கிலோவில் உடல் பகுதியை பொறிப்பிற்கும் தலை மற்றும் வால் பகுதியை குழம்பிற்கும் எடுத்துக் கொண்டேன்

  4. 4

    மீன் பொறிப்பிற்கு மீன்ப் பொடிகளை விட சிக்கன் பொடி மிகவும் சுவையாக இருக்கும் உபயேகித்துப் பாருங்கள் சுவைப்பிடிக்கும் சிக்கன் பொடியை தடவி 15நிமிடம் ஊறவைத்துப்பின் எண்ணெயில் பொறிக்கவும்

  5. 5

    சி்க்கன் பொடியில் உப்புச் சேர்ந்து இருந்ததால் எனக்கு தேவைப்படவில்லை தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும் பொறித்த மீன் தயாா்

  6. 6

    குழம்பு செய்ய ஆரம்பிக்கலாம் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம்,தக்காளி,மல்லிஇலைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு வதக்கிக் கொள்ளவும்

  7. 7

    பின் மிக்ஸி ஜாரில் தேங்காக்களை நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும் அதில் வதக்கியக்கலவைகளை ஆறியப்பின் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  8. 8

    அதேக்கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் மற்றும் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பின் அரைத்தக் கலவையைச் சேர்க்கவும்

  9. 9

    சேர்த்தக் கலவையை நன்றாக கிளரிவிடவும் பின் மிக்ஸிஜாரில் தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து ஊற்றிக் கொள்ளவும் பின் மஞ்சள் தூள்,குழம்பு மசால்ச் சேர்க்கவும்

  10. 10

    கலந்துக் கொண்டவுடன் மிளகாய்த் தூள்,தனியாத்தூள் சேர்த்து கலக்கவும் உப்பு உரப்புச் சரிப்பார்க்கவும் பின் புளிக்கரைசலை ஊற்றிக் கொள்ளவும் மீன்க் குழம்பைப் பொறுத்தவரை புளிப்பு அதிகமானால் சுவை அதிகமே

  11. 11

    பின் கொதித்தவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும் 10நிமிடத்தில் மீன் வெந்துவிடும் கொதித்ததும் மீன் உடையாமல் இறக்கவும் பின் பரிமாறவும்

  12. 12

    இப்போது நமக்குத் தேவையான கட்லாகண்டை மீன்குழம்பு மற்றும் வறுவல் சுவையாக தயார் செய்துப் பார்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes