பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
  1. 1/2 கப் பாசிப்பருப்பு
  2. 1/2 கப் நறுக்கிய முட்டைகோஸ்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. 1/4 டீஸ்பூன் மிளகு
  6. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. கறிவேப்பிலை
  8. மல்லி இலை
  9. கடுகு
  10. வற்றல் மிளகாய்
  11. உப்பு தேவையான அளவு
  12. 1 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    மேலே குறிப்படப்பட்டுள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    ஒரு மண் பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்பு,நறுக்கிய முட்டைகோஸ், மஞ்சள்தூள், எண்ணெய், தண்ணீரை சேர்த்து ஸ்டவ்வில் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    பின்பு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது்ம் சீரகம், மிளகு,நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின் வேகும் பருப்பு, முட்டைகோஸ்சில் சேர்க்கவும்.

  5. 5

    மேலும் கொஞ்ச நேரம் வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கவும்.

  7. 7

    பின்னர் கடுகு, வற்றல் தாளித்து பரிமாறும் பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவினால் மிகவும் சுவையான பாசிப்பருப்பு, முட்டைக்கோஸ் கூட்டு சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes