முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.
#Jan 1

முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)

முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.
#Jan 1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
  1. 1 கப் முளைக்கட்டிய கொள்ளு
  2. 1/2 கப் சாம்பார் வெங்காயம்
  3. 2 டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
  4. 1டீஸ்பூன் சீரகம்
  5. 1/4 டீஸ்பூன் கடுகு
  6. 1/4 கப் தேங்காய் துருவல்
  7. ஒரு சிறிய துண்டு புளி
  8. கறிவேப்பிலை
  9. 1/4 டீஸ்பூன் மஞ்ள்தூள்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கொள்ளை நன்கு கழுவி தண்ணீரில் பதினைந்து மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின்னர் தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் போட்டு ஹாட் பாக்ஸில் வைத்து இருபது மணி நேரம் மூடி வைத்தால் நன்கு முளைத்து விடும்.

  3. 3

    முழைக்கட்டிய கொள்ளு,தண்ணீர் சேர்த்து
    குக்கரில் வைத்து மூன்று விசில் விடவும்.

  4. 4

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், வற்றல்,தனியா தூள், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    சூடாறியவுடன் மிக்சி ஜாரில் சேர்த்து, தேங்காய், புளி,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  6. 6

    பின்பு வேகவைத்த கொள்ளுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலந்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

  7. 7

    நன்கு வெந்தவுடன் குழம்பை பரிமாறும்
    பௌலுக்கு மாற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இப்பொழுது மிகவும் சுவையான முலைக்கட்டிய கொள்ளு குழம்பு சுவைக்க தயார்.

  8. 8

    இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes

More Recipes