மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.
#Jan1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1/2 கப் மசூர் பருப்பு
  2. 1/2 கப் நறுக்கிய முட்டைக்கோஸ்
  3. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  6. 1/4 கப் சாம்பார் வெங்காயம்
  7. 2 தக்காளி
  8. தாளிக்க :
  9. 1 டீஸ்பூன் நெய்
  10. 1/4 டீஸ்பூன் கடுகு
  11. கறிவேப்பிலை
  12. மல்லி இலை
  13. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மசூர் பருப்பை நன்கு கழுவி ஓர் பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

  2. 2

    முட்டைகோஸ்,வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    முட்டைக்கோசை பொடியாக நறுக்கி,பருப்பில் சேர்த்து சாம்பார் தூள்,மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வேகும் பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  5. 5

    பருப்பு,முட்டைகோஸ் நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறும் பௌலுக்கு மாற்றி நறுக்கிய மல்லி இலை தூவினால் மிகவும் சுவையான மசூர் டால் முட்டைகோஸ் சாம்பார் சுவைக்கத் தயார்.

  6. 6

    இந்த சாம்பார் சாதம், சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes