முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#jan2
முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும்.

முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)

#jan2
முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1 கைப்பிடி அளவு முருங்கைக் கீரை
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 2பச்சை மிளகாய்
  6. கருவேப்பில்லை சிறிதளவு
  7. கொத்தமல்லி தழை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1 கப் ராகி மாவு,ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை,சின்னதாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.பின்பு,1 ஸ்பூன் சீரகம் சேரத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    நன்றாக கலந்த பின்பு,தோசைக் கல்லை சூடேற்றவும்.சிறிது மாவை எடுத்து கல்லில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

  4. 4

    சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு இரண்டு புறமும் நன்றாக வேக விடவும்.

  5. 5

    சுவையான முருங்கைக் கீரை அடை ரெடி.தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes