மேகி நூடுல்ஸ் பிரியாணி (Maggie noodles biryani recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

மேகி நூடுல்ஸ் பிரியாணி (Maggie noodles biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
2பேர்
  1. 1பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 1/2 வெங்காயம்
  3. 1/2 தக்காளி
  4. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1கப் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலவை
  6. 1/2கைப்பிடி தலா கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
  7. 1பிரியாணி இலை
  8. 1பட்டை
  9. 3லவங்கம்
  10. 2 ஏலக்காய்
  11. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  13. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1பாக்கெட் டேஸ்ட்மேக்கர்
  15. 1டீஸ்பூன் பிரியாணி மசாலா
  16. 1டேபிள்ஸ்பூன் தயிர்
  17. உப்பு
  18. 1டேபிள்ஸ்பூன் நெய்
  19. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    நூடுல்ஸை சுடு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும், பின் அதனை குளிர்ந்த நீரில் மூழ்கி வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதில் சிறிது எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் நெய், எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சேர்க்கவும். பின் கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி, சிறிது தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகளை நன்கு வேக விடவும்.

  5. 5

    பின் காய்கறிகள் வெந்ததும், ஏற்கனவே வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.

  6. 6

    நூடுல்ஸை சேர்த்து நன்கு கலந்து விடவும். இறக்கும்போது சிறிது நெய் விட்டு, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes