வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் (Veg sweetcorn soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 கப் ஸ்வீட் கார்ன்
  2. 1கேரட்
  3. 15 பச்சை பட்டாணி
  4. 1வெங்காயம்
  5. 5 பல் பூண்டு
  6. 1சிறு துண்டு இஞ்சி
  7. 1 ஸ்பூன் மிளகுத் தூள்
  8. சிறிதளவுகொத்தமல்லி இலை
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
  11. 2 ஸ்பூன் கார்ன் ப்ளார்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் நறுக்கி வைத்து எடுத்துக் கொள்ளவும். அரை கப் ஸ்வீட் கார்னை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு நான்-ஸ்டிக் தவாவில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் கேரட் பட்டாணி மற்றும் ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்பு அரைத்த கலவையை அதில் சேர்க்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

  4. 4

    கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை சூப்புடன் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்.

  5. 5

    இப்போது சூடான வெஜ் ஸ்வீட் கார்ன் சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes