தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 நபர்
  1. 1. 6பேக் உள்ள மேகி பாக்கெட் ஒன்று
  2. 2. பன்னீர்100gm
  3. 3. நறுக்கிய ஒரு கப் முட்டைகோஸ்
  4. 2 கேரட்
  5. 1 குடைமிளகாய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 2 பச்சைமிளகாய்
  8. 2 தக்காளி
  9. 2 ஸ்பூன் ஆயில் அல்லது 3 ஸ்பூன் பட்டர்
  10. 1 ஸ்பூன் மிளகு தூள்
  11. சிறிதுகறிவேப்பிலை நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பன்னீர்த்துண்டுகளை சிறிய சதுரவடிவில் வெட்டியெடுக்கவும்.அதில் கால் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் கொத்தமல்லி தூள் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சிறிது உப்பு சேர்த்து கலந்து பத்து நிமிடம் ஊற வைத்து அதை ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் ஆயில் விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

  2. 2

    அடுத்து ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் பட்டர் அல்லது ஆயில் விடவும். அதில்கொஞ்சம் கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய ஒரு கப் வெங்காயம், இரண்டு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்பு அதில் பொடியாக வெட்டிய இரண்டு கேரட் ஒரு குடைமிளகாய் மற்றும் நீளவாக்கில் வெட்டிய ஒரு கப் முட்டைகோஸ் இவற்றை சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் அளவு இன்ஜி பூண்டு பேஸ்ட், தனி மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் கொஞ்சம் மஞ்சத்தூள், அரை ஸ்பூன் கரம்மசாலாதூள், காய்க்கு தேவையானஉப்பு இவற்றை வதக்கவும்.

  3. 3

    அதில் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை குறைத்து வைத்து காய்களை அந்த தண்ணீர் சுருங்கும் வரை மட்டும் வேகவைக்கவும். ஏனென்றால் காய்கள் பாதியளவு வெந்தால்தான் சாப்பிடும்போது கிரென்ச்யாக இருக்கும்.

  4. 4

    தண்ணீர் சுருங்கியவுடன் அதில் மேகிக்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும். ஆறு பாக்கெட் மேகிக்கு ஆறு கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் மேகி மசாலா பவுடர் ஆறு பேக்கையும் பிரித்து சேர்க்கவும்.

  5. 5

    இப்பொழுது மேகி ஆறு பேக்கையும் சேர்க்கவும். பின்பு அடுப்பைக் குறைத்து வைத்து மேகியை கிளறி எடுக்கவும். தண்ணீர் சுருங்கியவுடன் மேகி முழுதாக வெந்திருக்கும். இறுதியில் அதில் ஒரு ஸ்பூன் மிளகு பொடி மற்றும் பட்டர் சேர்த்து கிளறி விடவும்.

  6. 6

    அதில் நாம் வறுத்து வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டுவிட்டு, அதில் குட்டியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான் சூப்பரான பன்னீர் வெஜிடபிள் மேகி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Indu Senthil
Indu Senthil @cook_28052972
அன்று

Similar Recipes