எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2பரிமாறுவது
  1. 3சப்பாத்தி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1குடைமிளகாய்
  5. 2முட்டை
  6. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  7. 1\2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. 1குழிக்கரண்டி குருமா

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சப்பாத்தியை நீள நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதாவது சப்பாத்தியை சுருட்டிக் கொண்டு அப்படியே நைசாக நறுக்கவும். தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிய பிறகு தக்காளி, குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    இப்போது இதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, குறைந்த தணலில் வைத்து சிறிது வேகவிட்டு கிளறி விடவும்

  4. 4

    பிறகு சப்பாத்தியை சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி விடவும்

  5. 5

    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  6. 6

    இதனை நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விடவும். பிறகு ஒரு குழிக்கரண்டி குருமாவை சேர்க்கவும்

  7. 7

    இதனை நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes