தக்காளி பாத்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#variety #tomatorice

சட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

தக்காளி பாத்

#variety #tomatorice

சட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 3 டம்ளர் பச்சரிசி
  2. 1/4 கப் எண்ணெய்
  3. 4பெரிய நாட்டுத்தக்காளி
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1பிரியாணி இலை
  7. கொத்தமல்லி இலைகள்
  8. புதினா இலைகள்
  9. 2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  10. 1/2 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
  11. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  12. 1/4 கப் தயிர்
  13. 2 மேஜைக்கரண்டி உப்பு
  14. 1 மேஜைக்கரண்டி நெய்
  15. 5.25 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மல்லி, புதினா இலைகளை நறுக்கி வைக்கவும்‌.

  2. 2

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பாதி மல்லி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். பின் தக்காளியை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும். கூடவே தயிர் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும். அதன்பின் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    கொதித்த பின் அரிசியை வடித்து சேர்த்து கொள்ளவும். மீதமுள்ள மல்லி புதினா இலையை சேர்க்கவும். இறுதியில் நெய் சேர்த்து மூடவும். குக்கரில் ஆவி வந்தபின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சுவையான தக்காளி பாத் ரெடி. இதனை அதிகம் கிளறாமல் திருப்பி விடவும். தயிர் பச்சடி அல்லது வேகவைத்த முட்டையுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes