#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்

மனோப்ரியா
மனோப்ரியா @cook_18197663

எனக்கு மிகவும் பிடித்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. இதை வீட்டில் இருக்கும் பொருள்கொண்டு மிகவும் சுலபமாக செய்து விடலாம்

#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்

எனக்கு மிகவும் பிடித்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. இதை வீட்டில் இருக்கும் பொருள்கொண்டு மிகவும் சுலபமாக செய்து விடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
  1. 3தக்காளி
  2. 1 கப்சாதம்
  3. 1வெங்காயம்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 3பச்சை மிளகாய்
  6. ஒரு கையளவுகொத்த மல்லி இலை
  7. கையளவுபுதினா இலை பாதி
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. 1 1/2 tbspஎண்ணெய்
  10. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  11. தாளிக்க
  12. 1பெருஞ்சீரகம்
  13. 1பிரிஞ்சி இல
  14. பட்டை
  15. கல்பாசி
  16. 1கிராம்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்க்கவும். டிப்ஸ்: எண்ணெய் சேர்க்காமல் நெய் மட்டும் கூட சேர்த்துக் கொள்ளலாம். லஞ்ச் பாக்ஸ் பேக் பண்ணுகிறீர்கள் என்றால் எண்ணெயும் நெய்யும் சேர்ந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கவும்.

  4. 4

    அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். ஒரு தட்டு போட்டு மூடி மிதமான தீயில் ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    இந்த நிலையில் தக்காளி கூட்டு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

  6. 6

    ஒரு அகலமான பாத்திரத்தில் வடித்த சாதத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் தேவைக்கேற்ப தக்காளி கூட்டு சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளவும். டிப்ஸ்: மொத்தமாக அனைத்து தக்காளி கூட்டையும் சேர்க்க வேண்டாம் உங்களது புளிப்பு சுவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும். நாட்டுத்தக்காளி என்றால் அதிகமாக புளிப்பு இருக்கும் பெங்களூர் தக்காளி என்றால் புளிப்பு இருக்காது.

  7. 7

    ஈஸியான தக்காளி சாதம் ரெடி இதை ரைத்தா அல்லது உருளைக்கிழங்கு வறுவல் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மனோப்ரியா
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அற்புதமான உணவு . எங்கள் அடுத்த பொரித்த உணவுகள் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்

Similar Recipes