ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#variety
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப் - பாசுமதி அரிசி
  2. 3 டீஸ்பூன் -நெய்
  3. 1- பிரியாணி இலை,3- கிராம்பு,1- பட்டை,1-அன்னாசி மொக்கு
  4. 1- பெரிய வெங்காயம்
  5. 2- பச்சை மிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 10- முந்திரி
  8. 15-உலர் திராட்சை
  9. 1 டீஸ்பூன்- துருவிய இஞ்சி
  10. 1 டீஸ்பூன்- நறுக்கிய பூண்டு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பாசுமதி அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.ஒரு குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும்.பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.2 நிமிடங்கள் வரை வதக்கவும்.

  2. 2

    பின்னர் 1 கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.பின் குக்கரில் மூடி போட்டு மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி ஆறவிடவும்.பின் ஒரு தாளிப்பு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி உலர் திராட்சை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.இதை சாதத்துடன் கலந்து கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ஹோட்டல் ஸ்டைலில் கீ ரைஸ் தயார்.இதற்கு தால் பிரை சில்லி வகைகள் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாகவும் இருக்கும்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes