எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. மூன்று முருங்கைக்காய்
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. தேங்காய் ஒரு மூடி
  5. 1டீ ஸ்பூன் மிளகாய் பொடி
  6. 2 டீஸ்பூன் தனியா பொடி
  7. கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
  8. 2 ஆர்க்கு கருவேப்பிலை
  9. 1ஆர்க்கு கொத்தமல்லி
  10. அரை ஸ்பூன் கடுகு
  11. அரை டீஸ்பூன் சீரகம்
  12. அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காயை அரை விரல் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வறுத்து, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி முருங்கைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவையான நீர் விட்டு மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

  4. 4

    முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விட குழம்பும் நன்கு அடர்த்தியாக ஆகிவிடும். நறுக்கிய கொத்தமல்லியை தூவி முருங்கைக்காய் பொரித்த குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes