தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் இட்லி மாவு
  2. 3 வெங்காயம்
  3. 8 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. 1_1/2 ஸ்பூன் கடுகு
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. கறிவேப்பிலை சிறிது
  8. 2_1/2 ஸ்பூன் கறிவேப்பிலை பொடி
  9. 1 கைப்பிடி அளவு வேர்க்கடலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சின்ன மினி இட்லி தட்டில் தேங்காய் எண்ணெய் தடவி மாவை நிரப்பி கொள்ளவும்

  2. 2

    பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் மாவை நிரப்பிய இட்லி தட்டை வைக்கவும் பின் மூடி வைத்து 10 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  3. 3

    இட்லி வெந்ததும் இறக்கி தட்டில் இருந்து எடுத்து வைக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் வேர்கடலையை சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் ரெடியா உள்ள கறிவேப்பிலை பொடி ஐ சேர்த்து நன்கு கிளறவும் (கறிவேப்பிலை பொடி எப்படி செய்வது என்று ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன் அதில் உள்ளபடி ரெடி செய்து கொள்ளவும்)

  7. 7

    பின் ரெடியா உள்ள இட்லி ஐ சேர்த்து நன்கு கிளறவும் ஒரு கைப்பிடி அளவு தண்ணீரை சிறிது தெளித்து விடவும் மசாலா இட்லி உடன் நன்கு சேரும் வரை கிளறவும்

  8. 8

    சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 8 நிமிடங்கள் வரை மூடி வைத்து கிளறவும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes