தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 250 கி சேமியா
  2. 100கி ஜவ்வரிசி
  3. 1 1/2 கப் சீனி
  4. 10முந்திரி 10 கிஸ்மிஸ்
  5. 1 ஏலக்காய்
  6. தேவைக்கேற்ப நெய், தண்ணீர்
  7. 1 லிட்டர் பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் ஒருக் கடாயில் ஜவ்வரிசியை போட்டு வறுக்கவும்

  3. 3

    நன்றாக பொறி மாதிரி மாறும் வரை வதக்கவும் கருகக் கூடாது பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின் அதேக்கடாயில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை வதக்கவும்

  5. 5

    அதே நேரம் மறுப்பக்கம் பாலைக் கொதிக்க வைக்க வேண்டும் ஏலக்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    பால் கொதித்ததும் சேமியாவைச் சேர்த்துக் கொள்ளவும் பின் சீனியையும் சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    நன்றாக கலந்ததும் வறுத்து வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்துக் கொள்ளவும்

  8. 8

    அனைத்தும் கலந்ததும் நன்றாக கொதிக்க விடவும் அனைத்தும் வெந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும்

  9. 9

    வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ்சை சேர்க்கவும்

  10. 10

    பின் பரிமாறவும் சுவையாக பாயாசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes