எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 கத்திரிக்காய்
  2. 1முருங்கைக்காய்
  3. 2 கேரட்
  4. 5 பீன்ஸ்
  5. 2 தக்காளி
  6. 100 கிராம் துவரம்பருப்பு
  7. வறுத்து அரைக்க:-
  8. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 1ஸ்பூன் முழு தனியா
  11. 1ஸ்பூன் மிளகு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 2 காய்ந்த மிளகாய்
  14. 3 பத்தை தேங்காய்
  15. புளி சிறிதளவு
  16. தாளிக்க:-
  17. 1ஸ்பூன் கடுகு
  18. கருவேப்பிலை
  19. 2 வெங்காயம்
  20. 2 தக்காளி
  21. உப்பு தேவையான அளவு
  22. எண்ணெய்
  23. 1ஸ்பூன் சாம்பார் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சூடேற்றிய பின்பு கடலை பருப்பு,மல்லி விதை, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை, முழு மிளகு, சேர்த்து நன்கு வறுக்கவும். அடுத்து குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு மஞ்சள் தூள், சேர்த்து மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு கடுகு, சீரகம், வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வதங்கிய பிறகு நறுக்கிய காய்கறிகள், தக்காளி சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும்.

  2. 2

    பிறகு வேக வைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பை, சாம்பார் தூள் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வறுத்து வைத்த மிக்ஸியில் சேர்த்து இதனுடன் தேங்காய், சேர்த்து விழுதாக அரைக்கவும். 10 நிமிடம் கழித்து கரைத்த புளி மற்றும் அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மனம் போகும் வரை கொதிக்கவிடவும்.

  3. 3

    தயார் செய்த இட்லிகளை பரிமாறும் கிண்ணத்தில் சேர்த்து அதன்மேல் தேவையான அளவு சாம்பார் ஊற்றி சிறிது நெய் சேர்த்து மல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

  4. 4

    ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes