சாம்பார் வடை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#everyday1
காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன்

சாம்பார் வடை

#everyday1
காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30+30 நிமிடம்
4 பேர்
  1. 1 டம்ளர் உளுத்தம்பருப்பு
  2. 1ஸ்பூன் பச்சை அரிசி
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன் மிளகு
  6. 1 பெரிய சைஸ் வெங்காயம்
  7. 1ஸ்பூன் உப்பு
  8. கருவேப்பிலை பொடியாக அரிந்தது
  9. கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது
  10. இஞ்சி தேவை என்றால்
  11. பொரிக்க தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1.30+30 நிமிடம்
  1. 1

    முதலில் உளுத்தம்பருப்பை பச்சரிசியுடன் சேர்த்து நன்றாகக் கழுவி மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒன்றரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் இவை அனைத்தையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.வெயில் காலம் என்பதால் நான் இஞ்சி சேர்க்கவில்லை தங்களுக்கு இஞ்சி வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் சீரகம் மிளகு இரண்டையும் பொடி செய்து கொள்ளவும் ஒன்றிரண்டாக.

  2. 2

    ஒன்றரை மணி நேரம் கழித்து உளுந்தில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கால் டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து நைசாக ஆட்டிக் கொள்ளவும். உப்பு சேர்த்து ஆட்டுவதால் வடை மிருது கொடுக்கும். பிறகு ஆட்டிய உளுந்தில் பொடியாக அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய்,கரு வேப்பிலை கொத்தமல்லி மற்றும் தூள் செய்த சீரகம் மிளகு அனைத்தையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    இப்போது ஒரு வானலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கைகளில் உளுந்து மாவை தட்டி வடையாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    இதற்கிடையில் சாம்பார் வடைக்கு தேவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பாரை தயார் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளவும். இப்போது சாம்பார் வடைக்கு தேவையான வடையை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். பிறகு இறக்கி வைக்கவும். சாம்பார் வடைக்கு எடுத்து வைத்த வடைகளை 5 நிமிடம் வரை சுடு தண்ணீரில் போட்டு வைக்கவும். பிறகு வடைகளை தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து சாம்பாரில் சேர்க்கவும். இப்படி சுடு தண்ணீரில் போட்டு எடுத்து சாம்பாரில் சேர்ப்பதால் வடை நன்கு ஊறி இருக்கும்.

  5. 5

    மேலும் சாம்பார் அதிகம் இழுத்து கொள்ளாது. சுவையான சாம்பார் வடை காலை டிபனுடன் ரெடி. ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes