மாங்காய் மல்லி சாதம்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2-3 பரிமாறுவது
  1. கொத்தமல்லி விழுது செய்ய
  2. 1 கட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  3. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 4 பச்சை மிளகாய்
  6. சாதம் செய்ய
  7. 2 கப் வேக வைத்த சாதம்
  8. 3/4 கப் + 1 டேபிள் ஸ்பூன் துருவிய மாங்காய்
  9. 1 டீஸ்பூன் உளுந்து
  10. 1 டீஸ்பூன் கடுகு
  11. 1 டீஸ்பூன் எண்ணெய்
  12. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  13. 1 வர மிளகாய்
  14. தேவையானஅளவு உப்பு
  15. சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சுருண்டு வரும் வரை வதக்கவும்... பிறகு இவை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவும் பிறகு துருவிய மாங்காயை சேர்த்து நன்றாக மிதமான தீயில் வதக்கவும்

  3. 3

    மாங்காயின் நிறம் நன்றாக மாறி வந்த பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும் இப்போது நெய் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும் இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து அதையும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை வதக்கவும்

  4. 4

    வேக வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும் இறுதியாக சிறிது துருவிய மாங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து பரிமாறவும்

  5. 5

    சுவையான மாங்காய் மல்லி சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes