சாம்பார் சாதம்

#Everyday2
தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் வீதம் 6 கப் அரிசி 24 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அரிசி மற்றும் பருப்பை இருபது நிமிடங்கள் வரை ஊறவிடவும் தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசி பருப்பை களைந்து தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும் கூட இரண்டு கரண்டி எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்
- 2
புளியை தனியாக ஊறவிடவும் அரிசி பருப்பு பாதி வெந்ததும் கல் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 3
அரிசி மற்றும் பருப்பை உதிரியாக இல்லாமல் குழைவாக வேகவைத்து எடுக்கவும் (அதிக அளவில் தண்ணீர் ஊற்றி கஞ்சியாக வேகவைக்க கூடாது சாதம் ருசி இருக்காது அளவான தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவைக்க வேண்டும்)
- 4
காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இடித்த பூண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி ஐந்து நிமிடம் வரை வதக்கி விடவும் பின் நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும் பின் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 6
முக்கால் வாசி அளவு (75 கிராம்) சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளறவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 7
காய்கறிகள் முக்கால் வாசி அளவு வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறவும் பின் பத்து நிமிடம் வரை நன்றாக புளி பச்சை வாசனை போக கொதித்ததும் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
- 8
பின் வேகவைத்த அரிசி பருப்பு சாதத்தை ஒரு முறை நன்றாக கிளறி விடவும் பின் இந்த காய்கறி கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து அடியில் இருந்து மேல் வரை நன்றாக கிளறி விடவும்
- 10
காய்கறிகள் சாதத்துடன் சேர்ந்து ஒன்றாக வரும் வரை நன்றாக கிளறி இறக்கவும்
- 11
பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 12
பின் நறுக்கிய வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறவும்
- 13
பின் கிளறிய சாதத்தில் கொட்டவும் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் மீதமுள்ள சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் அதை சாதத்தில் கொட்டவும்
- 14
(சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் பெருங்காயத்தூள் ஐ தீயவிட கூடாது இது மிகவும் முக்கியமானது இது தனி மணம் மற்றும் ருசியை கொடுக்கும்) நெய் கலந்த பொடியை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 15
சுவையான ஆரோக்கியமான மிகவும் எளிய முறையில சாம்பார் சாதம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பலா உருளை கிரேவி


மாங்காய் சாம்பார்


உருளைக்கிழங்கு சாம்பார்


ஆந்திரா டொமட்டோ பப்பு


சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


நெய் பருப்பு


பாதாம் அல்வா


கருவாட்டு குழம்பு(dry fish curry recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்


முள்ளங்கி சாம்பார்


முருங்கை காய் சாம்பார்


நட்ஸ் கேரட் கீர்


Instant sambar Saddam


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


பாவக்காய் பொரியல்


முட்டைகோஸ்,கேரட் பொரியல்


வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s


தேங்காய் சாதம்


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


எலுமிச்சை ஊறுகாய்


கல்யாண சாம்பார்


கேரட் பீன்ஸ் குருமா


வெண்டைக்காய் பொரியல்


முள்ளங்கி சாம்பார்


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


முருங்கைக் காய் சாம்பார்


கேரட் சாதம்


பச்சை மொச்சை பயிறு குழம்பு


கிழங்கா மீன் குழம்பு

கமெண்ட்