காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)

#Everyday2
மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள்.
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2
மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரண்டு தண்ணீரில் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும். காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். விருப்பப்பட்ட வேறு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- 2
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
அரைக்க குறிப்பிட்ட பொருட்களை ஒரு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். கூடவே நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்து கலக்கவும். மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை சிறுதீயில் சமைக்கவும். என்னை பிரிந்து வந்த பின் மல்லி புதினா பச்சை வாசனை போய் விடும். இப்பொழுது அரிசியை வடிகட்டி இதில் சேர்க்கவும்.
- 5
இதனை கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூடவே எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். குக்கர் மூடி போட்டு, ஆவி வந்த பின் விசில் போட்டு, சிறு தீயில் 7 நிமிடங்கள் சமைக்கவும்.
- 6
குக்கர் சூடு தணிந்த பின் திறந்து பார்க்கவும். கரண்டியால் லேசாக சாதத்தை கிளறி விடவும். மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான, பசுமையான இந்த புலாவ் தயிர் பச்சடியுடன் பரிமாற பொருத்தமாக இருக்கும். நீங்களும் சமைத்து ருசித்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
கொத்தமல்லி உருளை கிழங்கு புலாவ் (Coriander potato pulav recipe in Tamil)
*கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது.*இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.*உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு மிகவும் நல்லது.* இவை இரண்டு பொருள்களையும் உபயோகித்து மிக சுலபமான புலாவ் செய்யலாம். kavi murali -
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
🥥தேங்காய்ப் பால் பிரியாணி
#vattaram தேங்காய் பால் பிரியாணி மிகவும் ஈஸியாக செய்துவிடலாம் . வு செய்வதற்கு எளிதான ஒரு லஞ்ச். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மதிய டிபன் பாக்ஸ் உணவிற்கு ஏற்ற ரெசிபி... Kalaiselvi -
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்