சிறு பருப்பு சௌசௌ சாம்பார் (Moong dal Chowchow sambar)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2கப் பாசிப்பருப்பு
  2. 1 சௌசௌ
  3. 1டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. தேவையானஅளவு உப்பு
  8. தாளிக்க:
  9. 1டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்
  10. கடுகு
  11. கறிவேப்பிலை
  12. 2சாம்பார் வெங்காயம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் தண்ணீர்,பருப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், தக்காளியை நறுக்கி, கறிவேப்பிலையுடன் தாயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்னர் நன்கு குழைந்து வெந்த பருப்புடன்,நறுக்கிய சௌசௌ,சாம்பார் பொடி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

  5. 5

    வெங்காயம்,தக்காளியை வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    வேகும் பருப்பு, சௌசௌ வுடன் அரைத்த தக்காளி, வெங்காயம் விழுது, உப்பு சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

  7. 7

    நன்கு வெந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து சேர்க்கவும்.

  8. 8

    இப்போது எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.மிகவும் சுவையான சிறுபருப்பு சௌசௌ சாம்பார் சுவைக்கத்தயார்.

  9. 9

    இட்லி, தோசை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes