மெரினா பீச் மாங்காய் சுண்டல்

சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஊறிய தண்ணீரை வடித்து விட்டு, குக்கரில் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 3(அ)4 விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும். (4 விசிலுக்கு மேல் வேண்டாம் ஏனெனில் தோல் தனியாக உரிந்து விடும்)
- 3
கொடுக்கப்பட்ட அளவுகளில் மாங்காய், கேரட்டை ஒரே அளவாக பொடியாக நறுக்கி எடுத்துக் கொண்டு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயுடன், இஞ்சி துண்டை தோல் சீவி மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்
- 4
அடி கனமான கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்
- 5
பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து குறைந்த தணலில் வைத்து சிறிது வதக்கி விடவும். (வெங்காயத்தை அதிகம் வதக்கக் கூடாது)
- 6
அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி விழுதையும் சேர்த்து கிளறி விட்டு மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 7
மஞ்சள்தூள் பச்சை வாடை போக எண்ணெயில் வதக்கி விட்டு, வெந்த பட்டாணியை தண்ணீருடன் சேர்க்கவும்
- 8
அடுப்பை அதிக தணலில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வற்றும் வரை கிளறி விடவும்.
- 9
இப்போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு மாங்காய், தேங்காய், கேரட்டை சேர்க்கவும்
- 10
இதனை ஒரு அரை நிமிடம் வரை கிளறி விட்டு உடனடியாக அடுப்பை அணைத்து மேலே கொத்தமல்லித் தழையை தூவி இறக்கவும் (மாங்காய், தேங்காய், கேரட்டை வேக விடக்கூடாது.. நன்கு ஒரு சேர கிளறி உடன் அடுப்பை அணைக்கவும்)
- 11
சுவையான, சூடான மெரினா பீச் மாங்காய் சுண்டல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீச் சுண்டல்


தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்


சன்னா சுண்டல்


பீச் சுண்டல்


தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)


தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்


புளியோதரை


கறிவேப்பிலை சாதம்


ரெஸ்டாரன்ட் தோசை


வடகறி


கொண்டைக்கடலை சுண்டல்


பீச் சுண்டல்


சாம்பார் பொடி


வெஜிடபில் குருமா


Tomato Briyani


பால் பாயாசம்


பனிவரகு மிளகு பொங்கல்


முட்டை லேயர் பிரியாணி


வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்


கறிவேப்பிலை பொடி


காராசேவு


கர்நாடகா ஸ்டைல் வெஜ் புலாவ்


திலி சாறு


பிரட் பர்ஃபி


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி


பீச் சுண்டல்


மினி சாம்பார் இட்லி


நியூ பிரேக்ஃபாஸ்ட்


மேத்தி தேப்லா (வெந்தய கீரை தேப்லா)

கமெண்ட் (2)