முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#everyday4
அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. இரண்டு பெரிய முருங்கைக்காய் சதைப்பற்று உள்ளது
  2. 1உருளைக்கிழங்கு
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. அரை ஸ்பூன் மிளகுத் தூள்
  6. அரை ஸ்பூன் சீரக தூள்
  7. அரை ஸ்பூன் சோம்பு தூள்
  8. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்
  11. ஒரு ஸ்பூன் கடலை மாவு
  12. 4 ஸ்பூன் சோள மாவு
  13. ஒரு கப் ரஸ்க் தூள்
  14. தேவையானஅளவு சமையல் எண்ணெய்
  15. தேவையானஅளவு உப்பு
  16. தேவையானஅளவு தண்ணீர்
  17. ஒரு கொத்து கறிவேப்பிலை
  18. ஒரு கொத்து கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேகவைத்து அதன் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூனால் வழித்து வைக்கவும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும்

  2. 2

    கருவேப்பிலை கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு பெரிய பௌலில் மசித்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் மிளகுத் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் மிளகாய் தூள் கடலை மாவு 2 ஸ்பூன் ரஸ்க் தூள் தேவையான அளவு உப்பு எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதைப்பகுதி சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்கு பிசையவும்

  3. 3

    பிசைந்த மாவை தேவையான வடிவங்களில் உருவாக்கவும் சோள மாவில் தண்ணீர் கலந்து ஒவ்வொரு கட்லடாக முக்கி பிறகு ரஸ்க் தூளில் புரட்டி மீண்டும் சோள மாவில் முக்கி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும் ஒவ்வொன்றாக அனைத்தையும் செய்யவும்

  4. 4

    அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்து செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை மெதுவாக தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் பிறகு திருப்பி போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்

  5. 5

    எண்ணை அதிக அளவு ஊற்றி டீப் பிரை செய்யலாம் இந்த முறையில் அதிக அளவு எண்ணெய் செலவாகாது சூப்பராக இருக்கும்

  6. 6

    செய்து வைத்துள்ள அனைத்து கட்லட்களையும் இதே போல் வேகவைத்து எடுக்கவும் சூப்பரான முருங்கக்காய் ஃப்ளஸ் கட்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes