# வட்டார சமையல் 1இட்லி சாம்பார்

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 1/4கப் பாசிபருப்பு
  3. கத்தரிக்காய்,உருளைக் கிழங்கு
  4. வறுத்து அரைக்க
  5. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  6. தனியா 2 1/2 ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 3 -4
  8. வெந்தயம் & சீரகம் 1/4 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை ம.தூள் & சிறிது விளக்கெண்ணை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலில் எண்ணெய் விட்டு கடுகு 2 காய்ந்த மிளகாய் தாளித்து 2 பெரிய வெங்காயம் நீள வாக்கில் அரிந்து 2 பச்சை மிளகாயையும் சேர்க்கவும்

  3. 3

    இத்துடன் 2 பச்சைமிளகாயையும் சேர்க்கவும்...பின் 3 தக்காளியையும் சேர்க்கவும்

  4. 4

    இதில் அரிந்த கத்தரிக்காய் & உருளைக் கிழங்கு சேர்க்கவும்....

  5. 5

    வதங்கியதும் வேக வைத்த பருப்பில் கொட்டி 3/4 ஸ்பூன் மிளகாய் தூள்...2 ஸ்பூன் மல்லி பொடி உப்பு சேர்த்து கொதித்து காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடி தேவையான அளவு சேர்க்கவும்.....

  6. 6

    சாம்பார் கொதித்ததும் மல்லித் தழை சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes