பிரட் பீசா

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30. நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தக்காளி மூன்று
  2. பெரிய வெங்காயம் அரை
  3. பூண்டு 2 பல்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு
  6. பிரட்
  7. ஸ்பைசி ஆர்கனோ 1ஸ்பூன்
  8. சில்லி ஃப்ளேக்ஸ் 1 ஸ்பூன்
  9. சீஸ் ஸ்லைஸ் ஒன்று
  10. துருவிய சீஸ் சிறிதளவு
  11. வர மிளகாய் 4

சமையல் குறிப்புகள்

30. நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தக்காளி வெங்காயம் 4 வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்

  2. 2

    பின்பு அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்

  3. 3

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பல்லை சேர்த்து பச்சை வாசம் போனதும் அதில் அரைத்ததை சேர்க்கவும்

  4. 4

    அரைத்ததை சேர்த்து பிறகு குறிப்புக்காக டொமேட்டோ கெட்சப் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    நன்கு வற்றிய பிறகு அதில் சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கனோ சேர்த்து கிளறி இறக்கவும் பீசா சாஸ் ரெடி

  6. 6

    பிறகு தோசைக்கல்லில் சிறிது உப்பு தூவி அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பிரட்டில் நம் செய்த பிரட் சாஸ் தடவி சீஸ் வைத்து 2 வெங்காயம் தக்காளியை நன்கு நைசாக நறுக்கி சேர்த்து தம் வைத்து இறக்கவும் பிரட் பீசா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes