எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
2 பேர்
  1. பச்சரிசி 1/2 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. வெந்தயம் 1 ஸ்பூன்
  4. சுக்கு பொடி 1/4 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு 5
  6. நெய் 1 ஸ்பூன்
  7. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  8. மிளகு 1/2 ஸ்பூன்
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  11. இஞ்சி 1 இன்ச்
  12. கறிவேப்பிலை சிறிதளவு
  13. கடுகு 1 /2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு ஊறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்

  3. 3

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம் பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    மாவுடன் இந்த தாளிப்பு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சுக்கு தூள் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் உள்ளே அடி பக்கத்தில் வட்டமாக வாழை இலை போட்டு உள்ளே சுற்றிலும் வாழை இலை படுமாறு சுருட்டி வைக்கவும் (உள்ளே சுருட்டி வைக்கும் இலை கிழியாமல் இருக்க தீயில் இலேசாக வாட்டி வைக்கவும்)

  6. 6

    இதற்குள் மாவு கலவையை ஊற்றவும்

  7. 7

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு வடிகட்டி வைத்து அதன் மேல் இந்த மாவு பாத்திரத்தை வைத்து மூடி வேக விடவும்

  8. 8

    20 நிமிடத்திற்கு பிறகு ஒரு ஈரமான கத்தியை மாவின் அடிவரை விட்டு பார்க்கவும். கத்தியில் மாவு ஒட்டாமல் வரும் வரை வேக விடவும்

  9. 9

    வெந்த பின் வெளியில் எடுத்து இலையை உறித்து எடுக்கவும்

  10. 10

    துண்டு துண்டாக வெட்டி தக்காளி சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes