எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 6ஆட்டுக்கால்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 3/4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 4 பச்சை மிளகாய்
  6. 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  7. 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  8. 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 3 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  11. 1 /2 டேபிள் ஸ்பூன்சோம்பு தூள்
  12. 1 டேபிள் ஸ்பூன்மிளகு தூள்
  13. கொஞ்சம்கொத்தமல்லி இலை
  14. 2பட்டை 2 கிராம்பு 2ஏலக்காய் 1 கல்பாசி
  15. 2சில் தேங்காய்
  16. 10முந்திரி பருப்பு (அ) கசகசா 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஆட்டுக்கால் சுத்தம் செய்து சுடு தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்காலை குக்கரில் சேர்த்து அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு 20 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்

  6. 6

    அதில் வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து வதக்கவும்

  7. 7

    நல்ல வதக்கிய பிறகு அதில் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்

  8. 8

    பிறகு அதில் ஆட்டுக்கால் சேர்த்து கொள்ளவும்

  9. 9

    அதை நன்றாக கொதிக்க விடனும் பிறகு அதில் 1கப் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். அதை நன்றாக கொதிக்க விடனும்

  10. 10

    அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி பருப்பு விழுது சேர்த்து கொள்ளவும்

  11. 11

    அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். தேங்காய் முந்திரி சேர்த்தால் இன்னும் கெட்டியாகும் அதனால் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்

  12. 12

    நல்ல 2 கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விடவும் பிறகு கொஞ்சம் கொத்தமல்லி இலை மிளகு தூள் சேர்த்து சேர்த்து பரிமாறவும்

  13. 13

    சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி. இதற்கு இடியாப்பம் ஆப்பம் வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes