உருளை காரக்கறி. # combo 4

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4பேர்
  1. 250கிஉருளை கிழங்கு
  2. 1/2கப்வெங்காயம் நறுக்கினது
  3. 4டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  4. 1டீஸ்பூன்கடுகு
  5. 1ஸ்பூன்உ.பருப்பு
  6. 1ஸ்பூன்க.பருப்பு
  7. 2டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  8. 2 டேபிள்ஸ்பூன்மிளகாய் தூள்
  9. தேவைக்குஉப்பு
  10. 1டீஸ்பூன்ம.தூள்
  11. வேகவைக்கதண்ணீர்
  12. 2ப.மிளகாய்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    உருளை கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் ம.தூள் உப்பு சேர்த்து 2விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஆறினதும் தோலை நீக்கி உரித்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உ.பருப்பு க.பருப்பு ப.மிளகாய் தாளிக்கவும்.பிறகு வெங்காயம் சிறிது உப்பு ம.தூள் போட்டு வதக்கவும்

  4. 4

    சிறிது வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்.

  5. 5

    பின்பு வேக வைத்து உரித்த உருளை கிழங்கை போடவும்

  6. 6

    அனைத்தையும் ஒன்று சேர கிளறி இறக்கவும்.மேலே கொத்தமல்லி தழை இருந்தால் போடவும்
    சுவையான தேங்காய் எண்ணெய் மணத்துடன் உருளை காரக் கறி தயார்.

  7. 7

    தேங்காய் சாதம் உருளை காரக் கறி காம்போ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes