எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4- வேக வைத்த உருளை கிழங்கு
  2. 1- வெங்காயம்
  3. 1- தக்காளி
  4. 1 தே.க - கடுகு,உளுந்து
  5. 1/2 தே.க - சீரகம்
  6. 5 பல் - பூண்டு
  7. 1.5 மேஜைக்கரண்டி - மிளகாய் தூள்
  8. சிறிதளவு- கறிவேப்பிலை
  9. சிறிதளவு- மல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்ததும். சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். (வெங்காயம் விரைவில் வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.) பிறகு அதில் கருவேப்பிலை, தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளி சேர்த்து வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கை கைகளால் சிறிது மசித்து சேர்த்து கிளறவும். இறுதியில் மிளகாய் தோல் சேர்த்து குறைவான தீயில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.

  4. 4

    இறுதியில் மல்லித்தழை தூவி பரிமாறவும்.

  5. 5

    சத்தான உருளைக்கிழங்கு பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes