ரவை வெண்பொங்கல்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

ரவை வெண்பொங்கல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
4 servings
  1. 200கிராம் ரவை
  2. 75கிராம் பாசிப்பருப்பு
  3. நெய்
  4. எண்ணெய்
  5. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 2கொத்து கருவேப்பிலை
  8. 1பெரிய துண்டு இஞ்சி
  9. 10முந்திரி
  10. 1/4ஸ்பூன் பெருங்காயதூள்
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி 2மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். ஒரு கடாயில் மிதமான தீயில் ரவையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் வேக வைத்துள்ள பாசிப்பருப்புடன் ரவைக்கு தேவையான தண்ணீர் சேர்த்து (1க்கு 2வீதம்) நன்றாக கொதிக்க விடவும். அதில் பொங்கலுக்கு தேவையான அளவு உப்பு விரும்பினால் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தண்ணீர் கொதித்த உடன் தீயை குறைத்து வைத்து அதில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

  3. 3

    பின்னர் வேறொரு தாளிப்பு கடாயில் 1குழி கரண்டி எண்ணெய் 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் முதலில் மிளகு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதனுடன் முந்திரி, சீரகம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    பின்னர் தாளிப்பை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறவும். இதில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால் பொங்கல் கரண்டியில் ஒட்டாமல் வரும். நீண்ட நேரம் பொங்கல் இலகுவாக இருக்கும்.

  5. 5

    இந்த ரவை வெண் பொங்கல் சாம்பார், தேங்காய் சட்னி, கொஸ்து, வேர்க்கடலை சட்னி உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes