சென்னா மசாலா சாட்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4பேர்கள்
  1. 250கி வெள்ளை கொண்டைக்கடலை
  2. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1ஸ்பூன் மல்லித் தூள்
  4. 1ஸ்பூன் சீரகத்தூள்
  5. 1கரம் மசாலாத்தூள்
  6. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 2துண்டு பட்டை
  8. 6கிராம்பு
  9. 2பிரிஞ்சி இலை
  10. 2பெரிய வெங்காயம்
  11. 3தக்காளி
  12. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. தேவையான அளவுஉப்பு
  14. தேவையான அளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.. கடலையை வேக வைக்கும்போது அத்துடன் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வேக வைக்கவும்.. கடலை வெந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலையை எடுத்து விடவும்..

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.. அத்துடன் கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    எல்லாம் வதங்கியதும் அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.. தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    அதனுடன் கடலை வேகவைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.. வேக வைத்த கடலையை சிறிது எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.. அதையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்

  5. 5

    ஒரு கொதி வந்ததும் வேக வைத்த கடலையும் சேர்க்கவும்

  6. 6

    எல்லாம் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்

  7. 7

    இப்போது சுவையான சத்தான சென்னா மசாலா சாட் தயார்.. மேலே வெங்காயம் தூவி பரிமாறலாம்.. ஓமப்பொடி தூவியும் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (8)

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes