மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர்.

மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)

#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் பன்னீர்
  2. 1/2 கப் பச்சை பட்டாணி
  3. 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  4. 5 முந்திரிப் பருப்பு
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2தக்காளி
  8. பிரிஞ்சி இலை,ஏலக்காய், பட்டை & லவங்கம்
  9. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  10. 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  11. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  12. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. சிறிதுமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்ப, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது & தக்காளி இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து விழுதாக அரைத்து வைக்கவும்

  2. 2

    கடாயில் வெண்ணெய் சேர்த்து சிறிது பிரிஞ்சி இலை ஏலக்காய் பட்டை லவங்கம் தாளித்து, மிளகாய்த்தூள், தனியாத்தூள்,கரம் மசாலா சிறிது வதக்கி, வாசனை வந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    கொதி வந்தபின் பீஸ் மற்றும் பன்னீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்பு அதில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும். தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

  4. 4

    நன்கு கொதித்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து சிறிது கஸ்தூரி மேத்தி கையில் நசுக்கி அதில் சேர்த்து கலந்து விடவும். சூடான ரொட்டி குல்சா உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes