வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#bakingday
* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45-50 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 3 பழுத்த வாழைப்பழம்
  2. ஒன்றரை கப் கோதுமை மாவு
  3. ஒரு கப் சர்க்கரைத்தூள்
  4. 1/2 டேபிள் பேக்கிங் சோடா
  5. ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. கால் டேபிள் ஸ்பூன் பட்டைத்தூள்
  7. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  8. 100 மில்லி லிட்டர் எண்ணெய்
  9. ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

45-50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயை சூடேற்றி அதனுள் உப்பு தூள் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்டாண்டு வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதன் மேல் ஒரு சல்லடை வைத்து கோதுமை மாவு சர்க்கரை தூள் பட்டைத்தூள் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும். இப்பொழுது பேக்கிங் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுற்றிலும் தடவிக் கொள்ளவும்.

  3. 3

    இதனுடன் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து ப்ரீஹீட் செய்து உள்ள கடாயில் வைத்து மூடி போட்டு 45 முதல் 50 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.

  4. 4

    இப்பொழுது இதனை ஆற வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes