நெய் சாதம்(Ghee Rice)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#combo5
ghee rice & dal tadka

நெய் சாதம்(Ghee Rice)

#combo5
ghee rice & dal tadka

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கப் சீரக சம்பா அரிசி
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 1/2 தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. 1 கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி இலை
  7. 2துண்டு பட்டை
  8. 1அன்னாசிப்பூ
  9. 1பிரிஞ்சி இலை
  10. 11/2 கப் தேங்காய்ப்பால்
  11. 11/2 கப் தண்ணீர்
  12. 8முந்திரி பருப்பு
  13. 1டேபிள்ஸ்பூன் நெய்
  14. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    நெய் சாதம் செய்வதற்கு, குக்கரில் ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் எண்ணெய், ஊற்றி காய்ந்ததும்,பட்டை, அன்னாசிப் பூ,பிரிஞ்சி இலை, 2 நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,..... வதங்கியதும் நறுக்கிய தக்காளி,புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்,...

  2. 2

    ரெண்டு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் வீதம்,ஒன்றரை கப் தேங்காய்ப்பால்,ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும்,... தேவையான அளவு உப்பு சேர்த்து சரிபார்த்துக் கொள்ளவும்,.....

  3. 3

    அரை மணி நேரம், தண்ணீரில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை,அதனுடன் சேர்த்து லேசாக கொதிவந்ததும் குக்கரை மூடி 1 விசில் விடவும்,......

  4. 4

    ஒரு கடாயில்,அரை டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி, 1 நறுக்கிய வெங்காயம்,முந்திரிப்பருப்பு, சிவக்க வறுத்து,எடுத்து வைத்துக் கொள்ளவும்,.....

  5. 5

    குக்கர் விசில் அடங்கியதும், திறந்து,மேலாக வறுத்து வைத்த வெங்காயம், முந்திரிப்பருப்பு,சேர்த்து மெதுவாகக் கிளறி விடவும்,......

  6. 6

    நெய் சாதம் தால் தட்கா உடன் சுவைக்க தயார்,......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes