கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#mycookingzeal
கத்தரிக்காய் பொரியலைவிட இதுபோல் செய்தால் சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.அதிலுள்ள மசாலா மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இப்படி செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசியோ ருசி.க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4பேர்
  1. 1/4கிலோகத்தரிக்காய்
  2. 2டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
  3. 3டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  4. 2ஸ்பூன்மிளகாய் தூள்
  5. 2ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்தூள்
  6. 1டீஸ்பூன்ம.தூள்
  7. உப்பு ருசிக்கு
  8. 4டேபிள்ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  9. 1டீஸ்பூன் கடுகு
  10. 1ஸ்பூன் உ.பருப்பு
  11. 1/2ஸ்பூன்க.பருப்பு
  12. சிறிதளவுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கத்தரிக்காயை நான்காக பிளந்துக் கொள்ளவும்.மிக்ஸியில் வேர்க்கடலை பொட்டுக்கடலை ம.தூள் மிளகாய்தூள் உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிளந்த கத்தரிக்காயின் உள்ளே மசாலாவை நன்கு அடைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் கடுகு உ.பருப்பு க.பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு ம.தூள் மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய்தூள் உப்பு போடவும்.

  4. 4

    பின்பு அடைத்து வைத்த கத்தரிக்காயை போடவும்.சிறிது கறிவேப்பிலையை போடவும்.மூடி போட்டு மூடி வேகவிடவும்.

  5. 5

    நன்கு வெந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி போடவும்.மிகவும் ருசியான,"கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல் தயார்.

  6. 6

    எனது இன்றைய காலை உணவு,சாதம்,மூங்தால் அரைத்து விட்ட சாம்பார்,ரசம்,கத்தரிக்காய் ஸ்டஃப்டு பொரியல்,மோருடன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes