எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200கிராம் பன்னீர்
  2. 1/4கப் வால்நட்
  3. 3பெரிய வெங்காயம்
  4. 5தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 10பல் பூண்டு
  7. ஒரு துண்டு இஞ்சி
  8. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  11. 1ஸ்பூன் மல்லி தூள்
  12. 1ஸ்பூன் கரமசாலா
  13. 3/4ஸ்பூன் சீரகத்தூள்
  14. தேவையான அளவுஉப்பு
  15. 2டேபிள்ஸ்பூன் கசூரி பேத்தி
  16. சிறிதளவுகொத்தமல்லி
  17. 2 பட்டை
  18. 4கிராம்பு
  19. 1ஸ்பூன் சீரகம்
  20. 1ஸ்பூன் சோம்பு
  21. 2டேபிள்ஸ்பூன் நெய்
  22. 4டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    இதில் வால்நட் சேர்த்து வதக்கவும்.பிறகு சூடு தணிந்த பின்னர் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி கடாயில் நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

  4. 4

    அதே கடாயில் வெங்காயம், குடைமிளகாய் சிறிய க்யூபாக நறுக்கி எடுத்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    கடாயில் வெண்ணெய் சேர்த்து அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வதக்கி கொள்ளவும்.

  6. 6

    பிறகு தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்து இதில் ஊற்றி கலந்து விட்டு மூடி வைத்து கொள்ளவும். அரைத்த விழுது வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து வதக்கவும்.

  7. 7

    இதில் மஞ்சள் தூள், உப்பு, கரமசாலா, சீரகத்தூள், மல்லி தூள், மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து 2கப் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.

  8. 8

    இதில் வதக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய், பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு மூடி 10 நிமிடம் மீடியமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்.

  9. 9

    கடைசியாக கொத்தமல்லி, கசூரி மேத்தி சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

  10. 10

    சுவையான வால்நட் சத்து நிறைந்த பன்னீர் மசாலா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes