பேபி கார்ன் பன்னீர் மசாலா

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பேபி கார்ன் பன்னீர் மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 8பேபிகார்ன்
  2. 10 துண்டுகள்பன்னீர்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 5முந்திரி
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. ஒரு டீஸ்பூன்வெண்ணெய்
  8. ஒரு துண்டுஇஞ்சி
  9. 3 பல்பூண்டு
  10. ஒரு துண்டுபட்டை
  11. 2கிராம்பு
  12. ஒன்றுஏலக்காய்
  13. கால் டீஸ்பூன்சோம்பு
  14. ஒரு டீஸ்பூன்கஸ்தூரி மேத்தி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பேபிகார்ன் நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்

  2. 2

    ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூன்று நிமிடம் வதக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு முந்திரி சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி அரைத்து கொள்ளவும்

  5. 5

    கடாயில் வெண்ணெய் சேர்த்து சோம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்

  6. 6

    அதில் உப்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

  7. 7

    அதனுடன் வதக்கிய பேபிகார்ன் பன்னீர் துண்டுகள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு ஏழு நிமிடம் கொதிக்க விடவும்

  8. 8

    கடைசியாக கஸ்தூரி மேத்தி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes