எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. 2தக்காளி
  3. 3 ஸ்பூன் தனியா
  4. அரை ஸ்பூன் சீரகம்
  5. ஒரு ஸ்பூன் மிளகு
  6. 2வர மிளகாய் பூண்டு 10 பல்
  7. 1 சிட்டிகை வெந்தயம்
  8. புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  9. ஒரு ஸ்பூன்வெல்லம்
  10. 2 ஸ்பூன்தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.துவரம்பருப்பு கழுவி குக்கரில் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு 2 தக்காளியை சேர்த்து வேகவிடவும்.ஒரு வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தனியா சீரகம் மிளகு,வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். மிக்ஸியில் பொடிக்கவும். புளி ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.

  2. 2

    பூண்டு பத்து பல் உரித்து நசுக்கி வைக்கவும்.வேகவைத்த பருப்பை ஒரு டம்ளர் நீர் விட்டு தக்காளி கரையும் வரை நன்கு மசித்து வைக்கவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு சீரகம், சிறிது வெந்தயம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.பருப்புத் தண்ணீர்,கரைத்து வடித்த புளித் தண்ணீர்,அரைத்த ரசப்பொடி, உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து கலந்துவிட்டு லேசாக கொதித்து நுரை கட்டியதும் இறக்கவும்.

  3. 3

    ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். மல்லி இலை பொடியாக அரிந்து தூவி மூடி வைக்கவும். சுவையான மைசூர் ரசம் தயார். நீங்களும் செய்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes