தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 5 தக்காளி
  2. 2 பெரியவெங்காயம்
  3. 3 பச்சைமிளகாய்
  4. 1 டம்ளர் அரிசி
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1 கைப்பிடி புதினா இலைகள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2நெய்
  11. 2பட்டை
  12. 2 கிராம்பு
  13. 1/4 ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும். 1 டம்ளர் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு,ஏலக்காய், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு நல்லா மசித்து விடவும். பிறகு 1ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    பிறகு புதினா இலைகள், ஊற வைத்திருக்கும் அரிசி அதில் போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறவும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு தம்ளர் தண்ணீர் அளவு) குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.

  5. 5

    சுவையான தக்காளி சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes